1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ம் திகதி, ஏறாவூரில் நள்ளிரவு வேளையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குழந்தைகள்,சிறுபிள்ளைகள்,பெண்கள், வயோதிபர்கள் என விடுதலைப்புலிகளால் துப்பாக்கி, கத்தி,வாள்கள் மற்றும் கோடரிகள் போன்ற ஆயுதங்களால் கோரத்தனமாக தாக்கியதில் 121 அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 200 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தி்ருந்த அச்சம்பவம் எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை 32 ம் வருட நினைவு தினத்தை எட்டவுள்ளது.
அதனை முன்னிட்டு ஏறாவூர் சமூக நல அமைப்பு சுஹதாக்கள் உறங்கும் கப்றுஸ்தானங்களை சுத்தம் செய்ததுடன் நில்லாது,
இன்று (7)ம் திகதி காலை சஹீதாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மூலம் மீசான் கட்டைகள் நடும் நிகழ்வையும் நடாத்தியது.
0 comments :
Post a Comment