கல்முனையன்ஸ் போரமின் வருடாந்த பொதுக் கூட்டம்நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்தியத்தின் இருப்பு, கல்வி சமூக பொருளாதார துறைகளின் மேம்பாட்டில் முழு வீச்சுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் கல்முனையன்ஸ் போரமானது ஏழு ஆண்டுகள் களம் கண்டு தொடர்ந்தும் வெற்றிகரமாக பயணித்துக்கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கல்முனையன்ஸ் போரமின் நடப்பு ஆண்டிற்கான வருடாந்த பொதுக் கூட்டம் போரத்தின் காரியாலயத்தில் நிறைவேற்றுப் பணிப்பாளர் முபாரிஸ் எம். ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.

இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் 2021 ஏப்ரல் தொடங்கி 2022 மார்ச் வரையான நிருவாக ஆண்டிற்கான வருடாந்த செயற்பாட்டு அறிக்கை நிருவாகப் பணிப்பாளர் பீ. எஸ். சன்ஸீர் அவர்களாலும், பட்டயக் கணக்காளரினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையினை நிதிப் பணிப்பாளர் எம். வை. ரிபா அவர்களாலும் பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

மேலும் நடப்பு ஆண்டில் முன்னெடுக்க வேண்டிய செயற்றிட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளும், முன்மொழிவுகளும் அங்கத்தவர்களிடமிருந்து பெற்றப்பட்டு நடப்பு ஆண்டின் செயற்றிட்ட நகலும் இக்கூட்டத்தில் தயாரிக்கப்பட்டது. இதன்போது நாட்டின் சமகால பொருளாதார நெருக்கடியினை முகங்கொடுத்து எதிர்வருகின்ற பாதிப்புக்களை முகாமைத்துவம் செய்யவல்ல கல்முனை பிராந்திய மட்டத்திலான பதிலிருப்பு நடவடிக்கைகள் குறித்தும் விஷேட கவனம் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :