வீட்டின் யன்னல் வழியாக சென்று திருடிய நபர் கைது



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வாழைச்சேனை நெசவு வீதியிலுள்ள வீட்டு சமயலறை யன்னல் வழியாக உள் நுழைந்த திருடன் வீட்டின் பதினைந்து வயதுடைய சிறுமியின் தங்க மாலையை அறுக்க முற்பட்ட போது சிறுமி சத்தம் எழுப்பிய நிலையில் திருடன் தப்பி சென்றுள்ளார்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்த திருடன் அலுமாரியை உடைத்து அதிலிருந்த இருபத்தையாயிரம் ரூபாய் பணத்தினை எடுத்ததன் பிற்பாடு அங்கு உறங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தினை நசுக்கி தங்க மாலையை அறுத்த நிலையில் சத்தம் போட்டதன் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் எழும்பிய நிலையில் மாலையை எடுக்காமல் தப்பிச் சென்றுள்ளார்.

சிறுமி கூறிய அடையாளத்திற்கமைய குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், குறித்த இளைஞர் திருட்டு சம்பத்துடன் பல தடவை கைது செய்யப்பட்டவர் என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

பிரதேசத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனையால் இவ்வாறான திருட்டுச் சம்பவம் இடம்பெற்று வருவதுடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபர் போதைப் பொருள் பாவனையால் பலமுறை சிறைச்சாலைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :