ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா. முடிவு!



ஆர்.சனத்-
1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் முழு ஆதரவையும் வழங்கியது.
1989 இல் நடைபெற்ற 2ஆவது ஜனாதிபதித் தேர்தலின்போது ரணசிங்க பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கியது. இக்காலகட்டத்தில் ஐ.தே.கவுடன் இ.தொ.காவுக்கு நெருங்கிய உறவு இருந்தது. 89 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிட்ட இ.தொ.கா. வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர்.
எனினும், இ.தொ.காவுக்கு இரு தேசியப்பட்டில் ஆசனங்களை ஐக்கிய தேசியக்கட்சி வழங்கியது. சௌமியமூர்த்தி தொண்டமானும், தேவராஜும் சபைக்கு வந்தனர். அமைச்சு பதவிகளையும் வகித்தனர்.
1993 மே முதலாம் திகதி ரணசிங்க பிரேமதாச சுட்டுக்கொல்லப்பட்டார். பிரதமராக இருந்த டிபி விஜேதுங்க பதில் ஜனாதிபதியாக செயற்பட்டார். அதன்பின்னர் இடைக்கால ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டார். அவருக்கு இ.தொ.கா. நேசக்கம் நீட்டியது.
1994 இல் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் காமினி திஸாநாயக்க களமிறங்கினார். பொதுஜன பெரமுன சார்பில் சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க போட்டியிட்டார்.
தேர்தல் பரப்புரையின்போது காமினி திஸாநாயக்க படுகொலை செய்யப்பட்டார். அனுதாப வாக்குமூலம் வென்றுவிடலாம் என்ற நினைப்பில் காமினி திஸாநாயக்கவின் பாரியாரான வஜிரா ஸ்ரீமதி திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் ஐ.தே.க. களமிறக்கியது.
ஐ.தே.க .பக்கம் இருந்தாலும் இத்தேர்தலில் இ.தொ.கா. நடுநிலைபோக்கையே கையாண்டது. சந்திரிக்கா அம்மையார் வெற்றிபெற்றார். அதன்பின்னர் சந்திரிக்கா அரசில் இ.தொ.கா. இணைந்தது.
1999 டிசம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் மக்கள் கூட்டணிக்கு இ.தொ.கா. ஆதரவு வழங்கியது.
2005, 2010, 2015 இல் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. 2019 ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு இ.தொ.கா. நேசக்கரம் நீட்டியது.
2022 இல் கோட்டா பதவி துறந்தார். இலங்கை வரலாற்றில் நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்பு மூலம் ஜனாதிபதியை தெரிவு செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இதில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா. முடிவெடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :