கிழக்கு மாகாண ஆளுநராக கிழக்கை சேர்ந்த தமிழ் பேசும் ஒருவரை நியமிக்கும் படி ஐக்கிய காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
கிழக்கு மாணத்தில் 80 வீதமானோர் தமிழ் பேசும் மக்களே. இதன் ஆளுனராக தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்படுவதன் மூலமே மக்கள் மொழி பெயர்ப்பாளர் இன்றி தமது பிரச்சினைகளை ஆளுனரிடம் எடுத்துச்செல்ல முடியும்.
மாகாண சபைகள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே அம்மாகாண மக்களின் காலடிக்கு அரசியல் சேவைகள் வர வேண்டும் என்பதற்காகவே. மொழி ரீதியாக தமிழை கொண்ட வடமாகாணத்துக்கு பெரும் பாலும் தமிழ் பேசுபவர் நியமிக்கப்பட்டதை கண்டுள்ளோம். ஆனால் இன்று கிழக்கில் ஹிஸ்புள்ளாவை தவிர வேறு தமிழ் பேசும் ஆளுனர் நியமிக்கப்படவில்லை.
ஆகவே புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் முன்னெடுத்துச்செல்லும் நல்லதொரு தேசிய அரசியல் வழிகாட்டலில் கிழக்குக்கான ஆளுனரும் தமிழ் பேசும் ஒருவர் நியமிக்கப்படுவது மிக நல்லது என்ற கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவுக்கட்சியான ஐக்கிய காங்கிரஸ் கட்சி (உலமா கட்சி) ஆகிய நாம் கேட்டுக்கொள்கிறோம்.

0 comments :
Post a Comment