புதிய பிரதமர் தினேஷ் குணவர்தனவின் அரசியல் விவேகம் சர்வதேசஉறவுகளைப் பலப்படுத்த உதவும்.



ஏறாவூர் சாதிக் அகமட் -
சிறந்த அரசியல் பாரம்பரியம் மற்றும் குடும்பப் பின்னணியுள்ள தினேஷ் குணவர்தன, பிரதமராக தெரிவு

செய்யப்பட்டுள்ளதால் ஜனநாயக கதவுகள் அகலத்திறக்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

புதிய பிரதமர் தினேஷ் குணவர்தனவை வாழ்த்தி அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது;
தினேஷ் குணவர்தனவின் அரசியல் ஆளுமை, நமது நாட்டுக்குத் தேவையான சர்வதேச உறவுகளை விரிவுபடுத்தி உறுதியாக்கும். நிதானம் மற்றும் மிதவாதச் சிந்தனைகளால் அரசியலில் புடம் போடப்பட்டவர் புதிய பிரதமர் தினேஷ். இடதுசாரி அரசியலில் தடம் பதித்த பிரதமர் தினேஷ், நாட்டின் முன்னணி வகித்த பிரதமர் மற்றும் ஜனாதிபதிகளுடன் இணைந்து பணியாற்றிய பழுத்த அரசியல்வாதி. சிறுபான்மை சமூகங்களின் அரசியல் அபிலாஷைகள் அரசியலமைப்புக்கு முரணாகாத வகையில் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருந்தவர்.

இந்தக் கொள்கையுடன்தான் அவர், அமைச்சரவையில் செயலாற்றி வருகிறார். இவ்வாறான ஒருவரின் தலைமையில், அமைச்சராக பணியாற்றக் கிடைத்ததை வரப்பிரசாதமாகவே கருதுகிறேன். நாட்டின் முன்னணி அரசியல் வாதியான பிலிப் குணவர்தனவின் புதல்வரான தினேஷுக்கு பிரதமர் பதவி வழங்கியமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் விவேகத்தேயே

வெளிப்படுத்துவதாகவும் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :