இங்கே சில கேள்விகள் எழுகின்றது.
அதாவது கோட்டாவால் அனுப்பப்பட்ட ராஜினமா கடிதம் விசேட விமானம் மூலம் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்ததா ?
தொலைநகல் மூலமாக அல்லது வட்சப் மூலமாக அனுப்பப்பட்டதா ?
அல்லது மின்னஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டு இங்கே மஞ்சள் நிற “கொங்கரர்” கடதாசியில் பிரிண்ட் எடுக்கப்பட்டதா ?
அப்படியென்றால் அது யாருக்கு அனுப்பப்பட்டது ? சபாநாயகரிடம் குறித்த கடிதத்தை ஒப்படைத்தது யார் ?
என்றெல்லாம் எவரும் சிந்தித்ததாக தெரியவில்லை.
விடையம் இதுதான்.
அதாவது கோட்டாவின் மிக நெருக்கமான விசுவாசிகளில் முக்கியமானவர் பாதுகாப்பு செயலாளர் கமால் குனரட்ன அவர்கள். ஜனாதிபதி கோட்டாவை பாதுகாப்பாகக இலங்கையிலிருந்து தப்பிக்கவைக்கும் வரைக்கும் மிக அர்ப்பணிப்புடன் அவர் செயல்பட்டிருக்கின்றார்.
அப்போது நாட்டைவிட்டு கோட்டா வெளியேறும் முன்பே திகதியிடப்படாத கடிதம் கமால் குனரட்னவிடம் வழங்கப்பட்டிருக்கின்றது. உரிய இடத்துக்கு பாதுகாப்பாக சென்றடைந்தவுடன் கோட்டாவின் உத்தரவு கிடைத்த பின்புதான் அந்த கடிதத்தினை சபாநாயகரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அனைத்தும் நடந்திருக்கின்றது.
இந்த தகவல்கள் சில அதிகாரிகளை அடிப்படையாகக்கொண்டு பெறப்பட்டதாகும்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

0 comments :
Post a Comment