புதிய ஜனாதிபதியாக கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் நியமிக்கப்பட்டது காலத்தின் தேவையாகும்; றிஸ்லி முஸ்தபா..!



றொஸான் முஹம்மட்-
நாட்டின் எட்டாவது நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக பாராளுமன்றத்தின் மூலமாக பெரும்பான்மையை நிரூபித்து ரணில் விக்ரமசிங்கவை நியமித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதோடு தற்போது நாடு எதிர் கொண்டுள்ள வீழ்ச்சிக்கு நிச்சயம் பதிலாக அமையும் என முன்னாள் உயர்கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அவர்களின் புதல்வரும், மயோன் குரூப் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான றிஸ்லி முஸ்தபா தெரிவித்துள்ளார்.

புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிக்கும் கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பல தசாப்த அரசியல் அனுபவமும் வெளிநாடுகளுடனான சிறந்த நட்புறவும் கொண்ட ரணில் விக்ரமசிங்க அவர்களின் இப் புதிய வருகையானது வீழ்ச்சி கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ நிச்சயம் வழிவகுக்கும் என தான் நம்புவதாக தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்கள் தமது ஆட்சி காலத்தில் விட்ட தவறை இனிவரும் எந்த ஜனாதிபதியும் செய்ய மாட்டார்கள், பல்லின சமூகம் வாழும் இலங்கை தேசம் கட்டி எழுப்பப்பட வேண்டும் அதற்கு சிறந்த தெரிவாக இப்போதைய ஜனாதிபதியின் வருகையை தான் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் எதிர்க்கட்சியினர் மக்களை உசுப்பேற்றும் அரசியலை செய்து பொருளாதார அளவில் மிக வீழ்ச்சி கொண்டிருக்கும் இந்நாட்டை மேலும் வீழ்ச்சி பாதையில் கொண்டு செல்லாமல் அனைவரும் ஒத்துழைப்பு நழுகி புதிய தேசத்தை கட்டி எழுப்ப முன்வர வேண்டும் என்றும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய அவ் வாழ்த்து கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :