டயர்கள் மரக்குற்றிகள் முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் எரியூட்டப்பட்டுள்ளனபாறுக் ஷிஹான்-
நாடளாவிய ரீதியிலான அரசாங்கத்திற்கு எதிராக பல தரப்பினர் மேற்கொண்டுள்ள எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்துள்ள நிலையில் டயர்கள் மரக்குற்றிகள் என்பன முக்கிய சந்திகளில் போடப்பட்டு இனந்தெரியாதவர்களால் புதன்கிழமை(11) அதிகாலை எரியூட்டப்பட்டுள்ளன.

எதிர்வரும் தினங்களில் நாட்டின் முக்கிய அரசியல் நிலைமை தொடர்பில் உத்தியோக பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் டயர்கள் போடப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளன.
அம்பாறை- கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு தாளவட்டுவான் சந்தி நற்பிட்டிமுனை சந்தி உள்ளிட்ட பகுதிகளில் இவ்வாறு டயர்கள் மரக்குற்றிகள் உள்ளிட்டவைகள் பிரதான பாதையில் போடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளன.
மேலும் சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸார் அவ்விடத்திற்கு வருகை தந்து எரியூட்டப்பட்ட டயர்கள் மரக்குற்றிகளை அகற்றி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் அவசர கால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் அப்பகுதியினால் பயணம் செய்யும் மக்களும் பொலிஸாரின் சோதனைக்கு உட்படுவதை காண முடிகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :