வான் புலிகளுக்கு இல்லாத வீரியம் மக்கள் சக்திக்கு உள்ளதா ? பௌத்த தலைவருக்கு தஞ்சம் வழங்கிய தமிழ் பிரதேசம் ?2007 தொடக்கம் 2009 வரைக்குமான இறுதிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் தலைநகரின் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த இடங்களில் விடுதலை புலிகளின் விமானத்தாக்குதல் அச்சுறுத்தல் கடுமையாக இருந்தது.

இரவு நேரங்களில் கொழும்பில் திடீர் திடீரென வான் புலிகளின் வானூர்திகள் தோன்றுவதும் தாக்குதல் நடத்துவதும் பின்பு மறைவதும் அடிக்கடி நிகழ்ந்தது. இதனால் அப்போது அலரிமாளிகையில் வசித்துவந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களினது பாதுகாப்பு கருதி அலரிமாளிகைக்கு கீழே நிலத்தடி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டிருந்ததாக அன்றைய செய்திகள் தெரிவித்தன.

ஆனால் இன்றைய போராட்டக்காரர்களிடம் ஆயுதங்களுமில்லை, விமானமுமில்லை அதாவது நிராயுதபாணிகளாக அகிம்சை போராட்டத்தில் இறங்கிய மக்களின் மூர்க்கத்துக்கு முன்பாக நிலத்தடி பாதுகாப்பு அரணினால் பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை. அதனால் நின்றுபிடிக்க முடியாமல் தனது உயிரை பாதுகாக்கும் பொருட்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தப்பியோடியதானது மக்கள் சக்தியின் வீரியத்தை காண்பிக்கின்றது.

அத்துடன் அதிகாரம் இருந்தும், நாடு முழுவதிலும் பல கோடிகள் பெறுமதியில் ராஜபக்ச குடும்பத்துக்காக கட்டப்பட்ட எந்தவொரு அரண்மனைகளும் சந்தர்ப்பத்துக்கு பிரயோசனப்படவில்லை. அதாவது நாடு முழுவதிலும் மக்களின் அச்சுறுத்தல் காரணமாக படை முகாமில் தஞ்சம் அடையும் அவலநிலை ஏற்பட்டது.

ஒட்டுமொத்த பெரும்பான்மை சிங்கள வாக்குகளை கவர்வதற்காக பௌத்த சிங்களவர்களின் உண்மையான பாதுகாவலனாகவும், தேச பற்றாளனாகவும், புலிகளிடமிருந்து நாட்டை மீட்ட வீரனாகவும் சிங்கள மக்கள் மத்தியில் தன்னை காண்பித்துவந்த மகிந்த ராஜபக்ச அவர்கள், தமிழ் முஸ்லிம் மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையில் அல்லது அந்நிய இனத்தவர் போன்று கான்பிக்கத் தவறவில்லை.

இறுதியில் அவர் தனது உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக தஞ்சமடைவதற்கு நாட்டின் எந்தவொரு சிங்கள பிரதேசமோ, தேசப் பற்றாளர்களோ அல்லது சிங்கள பிரதேசத்தில் உள்ள படை முகாம்களோ அவருக்கு கைகொடுக்கவில்லை. அதனாலேயே தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற கிழக்கின் திருகோணமலை பிரதேசமே அவருக்கு பாதுகாப்பாக அமைந்தது.

அதாவது அன்றைய புலிகளின் வான் படையினர்களினால் வீசப்பட்ட குண்டுகளுக்கு இல்லாத வீரியமும், சக்தியும் இன்றைய மக்கள் சக்திக்கு உள்ளது என்பதனை இது காண்பிக்கின்றது.

முகம்மத் இக்பால்
சாய்ந்தருது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :