தமிழால் இணைந்த ஊடகத்தோழனின் இழப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பாக அமைந்துள்ளது : சிலோன் மீடியா போரம் இரங்கல் !



நூருல் ஹுதா உமர்-
துறைநீலாவணையினைச் சேர்ந்த ஆசிரியரும், ஊடகவியலாளருமான பாக்கியராசா மோகனதாஸ் கடந்த இரவு (23) இறைபதம் எய்தினார் எனும் செய்தி ஊடகத்துறைக்கு மட்டுமல்ல இன நல்லிணக்கத்திற்கும் சோகமான செய்தியாக அமைந்துள்ளது. துடிதுடிப்பான ஊடகவியலாளராக, நல்ல கலைஞராக வாழ்ந்து மறைந்த சக ஊடகவியலாளர் பாக்கியராசா மோகனதாஸ் இலைமறை காயாக இருந்த பலருக்கும் வெளிச்சம் கொடுத்த ஒருவராக இருந்தார் என சிலோன் மீடியா போரம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

இளம் ஊடகவியலாளரான இவர் குறுகிய காலத்தினுள் தனது ஊடகப் பயணத்தினை ஆரம்பித்து இலங்கையில் வெளிவருகின்ற பிரபல நாளிதழ்களில், இணையங்களுக்கு பல வருட காலமாக கட்டுரைகள், அரசியல் வாதிகளின் பேட்டிகள், கலைஞர்களின் படைப்புக்கள் என பல்வேறு விடயங்களை வெளிக்கொண்டு வந்த பல்துறைக் கலைஞரான இவருக்கு பல வருடங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண இளம் ஊடகவியலாளர் விருது கிடைத்தமை இங்கு நினைவு கொள்ளவேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.

சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். இவரது உடல் எங்களை விட்டு மறைந்தாலும் அவரின் எழுத்துக்களும், நல்ல குணவியல்வுகளும் எங்களை விட்டு மறையாது. அவரது பிரிவினால் துயருற்றிருக்கும் சகலருடனும் சிலோன் மீடியா போரம் துக்கத்தை பகிர்ந்து கொள்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :