இந்தியாவைச் சேர்ந்த தம்பதிகள் (அமெரிக்காவில் மருத்துவர்களாக கடமை புரியும்) தமது சொந்த நிதியில் ஆறு இலட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதில் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு உலர் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டு வருமானம் குறைந்த 100 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
முன்னாள் பிரதித் தவிசாளர் ஐ.எல். ஹக்கிம் பீ.சி.தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் மாவட்ட கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம சேவையாளர்கள் உட்பட ஏராளமான அதிதிகளும் கலந்து கொண்டனர். ஹக்கீம் பி.சியின் பெரும் முயற்சியின் காரணமாக தமது சொந்த நிதியில் கடந்த 2020,2021 வருடம் கனடா லங்கா தொண்டர் அமைப்பு கனடா ரிலிப் சிறிலங்கா அமைப்பின் மூலமாக பணத்தை வழங்கிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த கனடாவில் வாழும் சகோதர் அபூ அப்துல்லாஹ் (சஹீட் அஸ்வர்) என்பவர் மூலமாக கிடைக்கப் பெற்ற பணத்தை கொண்டு வருமானம் குறைந்த 100 குடும்பங்களுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் பெறுமதியான பொதிகளே வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் இதன் போது பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாவுக்கும் நிநியுதவியுமளிக்கப்பட்டன. இரண்டு பள்ளிவாசலுக்கு கஞ்சி கியாமுல் லைல் சஹர் உணவுக்காகவும் ஆண்கள் மதரஸாவுக்கு இப்தார் நிகழ்வும். இரவுச் சாப்பாட்டுக்காகவும் பணம் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment