நிந்தவூர் பிரதேச கடற்கரைச் சூழல் சுத்தம் செய்யப்பட்டது.



நூருல் ஹுதா உமர்-
நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கடற்கரை சூழல் நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம். அஸ்ரப் தாஹிரின் பணிப்புரையின் பேரில் நிந்தவூர் பிரதேச சபையின் ஊழியர்கள் ஊடாக நிந்தவூர் பிரதேச கடற்கரைச் சூழல் சுத்தம் செய்யப்பட்டது.

எமது நாட்டில் நிலவுகின்ற மின்வெட்டின் காரணமாக பொது மக்கள் அதிகமாக கடற்கரை பிரதேசத்திற்கு இயற்கை காற்றை சுவாசிப்பதற்காகவும் பொழுது போக்கிற்காகவும் வருவதை அவதானிக்க முடிகிறது. அவ்வாறு மக்கள் கூட்டம் அதிகரிப்பதனால் கடற்கரை சூழல் வெகுவாக மாசடைந்து வருவதை கருத்தில் கொண்டே இத்துப்பரவு பணி மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு பொழுது போக்கிற்காகவும் ஒய்வு நேரங்களை கழிப்பதற்காகவும் கடற்கரைக்கு வருகின்றவர்கள் தங்கள் கழிவுகளை முறையாக சுத்தப்படுத்தி சூழல் மாசுபடுத்தலை தடுப்பதற்கு உதவுமாறும் பிரதேச சபையூடான கழிவகற்றல் முகாமைத்துவத்திற்கு உதவுமாறும் பொது மக்களை தவிசாளர் தாஹிர் கேட்டுக் கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :