இறந்து அழியும் நிலையில் சாய்ந்தமருது பொலிவேரியன் பாலம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பொலிவேரியன் சுனாமி குடியேற்ற கிராமத்திற்கு செல்லும் கிழக்கு பகுதியிலுள்ள இரும்பு பாலம் துருப்பிடித்து ஓட்டைகள் விழுந்து போக்குவரத்திற்கு பொருத்தமில்லாத நிலையில் காணப்படுகின்றது.
சுமார் 15 வருடங்களுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இப்பாலத்தை தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இப்பாலத்திற்கு அப்பால் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் , மஸ்ஜிதுல் ஹிஜ்ரா பள்ளிவாசல் , எம்.எஸ்.காரியப்பர் வித்தியாலயம் , கால்நடை சுகாதார காரியாலயம் , பெண்கள் அரபு கல்லூரி , பொது விளையாட்டு மைதானம் , பல்தேவை கட்டடத் தொகுதி , குவாசி நீதிமன்றம் போன்ற அரச அலுவலகங்கள் அமைந்துள்ளன.
இப்பாலத்தினால் தினசரி நூற்றுக்கும் அதிகமாக வாகனங்களும் கனரக வாகனங்களும் பயணிக்கின்றன. பாலத்தினூடாக வாகனங்கள் செல்லும் பாலத்தில் அதிரவு உணரப்படுகின்றது.
.இப் பாலத்தின் கீழ் புற்கள் வளர்ந்து பற்றைக்காடு போன்றும் , நீர்க்களைகள் வளர்ந்து மிகவும் இடைஞ்சலாக காணப்படுகின்றது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப் பால விடயத்தில் கூடிய கவனம் செலுத்துமாறு பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :