அரசை எதிர்த்தோ ஆதரித்தோ ஆர்ப்பாட்டம் செய்வது சகல மக்களுக்கும் உரித்தான ஜனநாயக உரிமையாகும். ஆனாலும் வன்முறையை யாரும் கையில் எடுக்க அனுமதி இல்லை.
கோல்பேசில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் கலந்து கொண்டமை தேவையற்ற ஒன்றாகும். ஏனெனில் முஸ்லிம்கள் 99 வீதம் கோட்டாபய ராஜபக்ஷவை கடந்த தேர்தலில் ஆதரிக்காதவர்கள். அதனால் ரவூப் ஹக்கீமின் உசுப்பேற்றல் காரணமாகவே இவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஆனாலும் கோல் பேசில் மைக்கில் அதான் சொல்வது, கூட்டுத்தொழுகை, இப்தார் என எல்லை கடந்த போது நாம் சமூகத்தை எச்சரித்தோம். ஒரு முஸ்லிமுக்கு தொழுகை நேரம் எது என்று தெரியும் என்பதால் பள்ளிக்கு சென்று தொழலாம், அல்லது தொழும், இப்தார் செய்யும் நிகழ்வை யாரும் வீடியோ, போட்டோ எடுத்து சமூக வலையத்தளங்களில் வெளியிட வேண்டாம் என்றும் இது இனவாதிகளுக்கு தீனியாக அமைந்து விடும் என்றும் பகிரங்கமாக நாம் அறிவித்தோம். ஆனாலும் யாரும் கேட்கவில்லை.
இந்த நிலையில் அங்கு கலந்து கொண்ட முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாத அமைப்புக்கள் என வழமை போன்று எந்த அடிப்படை அறிவும் இன்றி பொதுபல சேனா தெரிவித்துள்ளது. இவ்வாறான பொய்யான கருத்துக்களை பொதுபல சேனா சொல்லும் அளவுக்கு முஸ்லிம்களும் நடந்து கொண்டது தவறாகும்.
இந்த அரசை 99 வீதம் சிங்கள மக்களே வாக்களித்து கொண்டு வந்தவர்கள். அவர்களுக்கு பிடிக்காவிட்டால் அரசுக்கு வாக்களித்த அவர்கள் அதனை வீட்டுக்கு அனுப்புவார்கள். அதே போல் கோட்டாவுக்கு ஓட்டுப்போட்ட முஸ்லிமும் கலந்து கொள்ளலாம். ஆனால் இந்த அரசுக்கு ஓட்டுப்போடாத முஸ்லிம்கள் இதில் தலையை ஓட்டுவதும் கோட்டா வேண்டாம் என சொல்வதும் அநாவசியமாகும். கோட்டா வேண்டாம் என்றுதானே இவர்கள் சஜித்துக்கு வாக்களித்தார்கள்.
இரண்டு வருடமாக பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்வதை விட சமூகம் தொடர்ந்தும் வாக்களித்து, 22 வருடங்களாக தம் சமூகத்தை ஏமாற்றி அதன் வாக்குகளை மது, மாது, பணம் பதவிக்காக விற்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் ரவூப் ஹக்கீமுக்கும் எதிராக கிகர்ந்தெழுவதே முஸ்லிம் சமூகத்தின் இன்றைய தேவையாகும்.
0 comments :
Post a Comment