சர்வகட்சி மாநாட்டை புறக்கணிப்பதேசிறுபான்மை கட்சிகளுக்கு சிறந்தது!!! முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ்.



ர்வகட்சி மாநாட்டில் சிறுபான்மை கட்சிகள் கலந்து கொள்ளக்கூடாதென்பதே,தனது தனிப்பட்ட நிலைப்பாடு என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும் மேல்மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான பாயிஸ் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மைவாதத்தில் ஊறித் திளைத்த இந்த அரசாங்கம் கடந்த காலங்களில் சிறுபான்மை சமூகங்களை கண்டுகொள்ளாது புறக்கணித்தது. முஸ்லிம்களுக்கு எவ்வளவோ நெருக்கடிகள் வந்தபோது,ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு கூட நேரம் ஒதுக்கப்படவில்லை.இப்போது பொறியில் மாட்டியுள்ளதாலே,இந்த அரசாங்கம் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுகிறது.அதுவும்,ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்காகவே இம்மாநாடு கூட்டப்படுகிறது. அரசாங்கத்துக்குள் ஏற்பட்டுள்ள முறுகல்நிலையை தீர்ப்பதற்கும்,ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைத் திருப்திப்படுத்தவும் கூட்டப்படும் இந்த சர்வகட்சி மாநாட்டில், சிறுபான்மை கட்சிகள் கலந்து கொள்ளத் தேவையில்லை.

குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதில்,கலந்து கொள்ளவே கூடாது. எவ்வாறானாலும் கட்சியின் முடிவுக்கு கட்டுப்பட வேண்டிய பொறுப்பில்தான், நான் இருக்கிறேன். இதற்கப்பால்,சர்வகட்சி மாநாட்டை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புறக்கணிப்பது சிறந்ததென்பதே தனது தனிப்பட்ட நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :