சௌபாக்கியா வாரம் நாடு பூராகவும் 24/03/2022 தொடக்கம் 31/03/2022 வரை அனுஸ்டிக்கப்படுகின்றது. மண்முனை தென் எருவில் பற்று, களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனுகரிகளுக்கு பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் தலைமையில் காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை ( 25 ) இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி.சத்தியகௌரி தரணிதரன், சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் திரு.கே.உதயகுமார், கருத்திட்ட முகாமையாளர் திருமதி.எஸ்.தமிழ்வாணி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட திருமதி.வசுமதி கேசகபிள்ளை , திருமதி.ஜெயராணி புஸ்பராசா , திரு.கதிரவேலு சிறிகாந்தன் ஆகியோருக்கும் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment