சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு


ஏறாவூர் சாதிக் அகமட்-
மது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்ககும் நிகழ்வு ஏறாவூர் நகர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் St.Jhons அம்பியுலன்ஸ் அசோசியேஷன் மற்றும் Brigade நிறுவனத்தின் மாவட்ட தலைவர் ALM.மீராசாஹிப்  தலைமையில் இடம்பெற்றது.

இன்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத் , ஏறாவூர் நகர சபை தவிசாளர் .MSM.நழீம் , விசேட அதிதிகளாக ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஸாபிரா வஸீம் , ஏறாவூர் நகர சபை செயலாளர் .MHM.ஹமீம், ஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஜனாப்.AW. இர்சாத் அலி , ஏறாவூர் நகர் பிரதேச சிறுவர் நல மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு.S. பிரபாகரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், பிரதம அதிதி ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரதேச செயலாளர் நிஹாரா மௌஜூத் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வந்த போதிலும் இவ்வாறான வருமைக்கோட்டின் கீழ் வாழும் எமது மாணவர்களது கல்விக்காக உதவி புரிந்த இன்நிறுவனத்திற்கும், இதனை ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் ஸாதிக் அவர்களிற்கும் நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், மேலும் இரு தினங்களில் ஊடகவியலாளர் ஸாதிக் அவர்களின் ஏற்பாட்டில் முதல் கட்டமாக வருமைக்கோட்டின் கீழ் வாழும் 05 ஏழைக் குடும்பங்களுக்கான ரூபா. 3000.00 பெருமதியான உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்படவுள்ளன.தெரிவித்தார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :