தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாண அலுவலகத்தை, அம்பாறைக்கு இடமாற்ற வேண்டாம் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம், மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் கோரிக்கை!



சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் அமைச்சின் கீழ் உள்ள, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் அம்பாறைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சாய்ந்தமருதில் இயங்கிவரும் கிழக்கு மாகாண அலுவலகத்தின் செயற்பாடுகளை தொடர்ந்தும் அதே இடத்தில் மேற்கொள்ளும் வகையில், அதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கு இன்றைய தினம் (23) கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம், சாய்ந்தமருதிலுள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்திற்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருகிறது. இதனை அம்பாறை நகரத்திற்கு இடமாற்றம் செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதனை தடுத்து நிறுத்தி, குறித்த அலுவலகம் அவ்விடத்திலையே தொடர்ந்தும் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் அக்கடிதத்தில் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :