முகைதீன் அப்துல் காதர் வித்தியாலய அங்குரார்ப்பண நிகழ்வு மிகவும் கோலாகலமாக வித்தியாலயத்தின் முதல்வர் நளீம் (சலாமி) யின் தலைமையில் 20.03.2022 நேற்று முன்தினம் நடைபெற்றது
பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான அல் ஹாபில் அல் ஹாஜ் Z.A. நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட கோறளை பற்று மேற்கு, கல்வி கோட்டத்தில் கோறளை பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் அறபா நகரில் புதிதாக முன்னாள் பிரதியமைச்சர் மர்ஹூம் முஹைதீன் அப்துல் அவர்களின் பெயரில் உருவாக்கப்பட்ட மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் 27வது பாடசாலையாக இன்று ஆரம்பிக்கப்பட்டு திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அல் ஹாபில் அல் ஹாஜ் Z.A நசீர் அஹமட் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு கௌரவ அதிதிகளாக கோறளை பற்று மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஏ.எம் நௌபர் அவர்களும் மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளர், கலாநிதி உமர் மௌலானா ஏனைய சிறப்பு அதிதிகளாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள் ,கௌரவ பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் ஏ.ஏ நாசர், முன்னாள் ஏறாவூர் நகரசபை உறுப்பினர் எம்.ஐ தஸ்லிம், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டதோடு கௌரவ முன்னால் பிரதி அமைச்சர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் புதல்வர் முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment