தேசிய காங்கிரஸுக்குள் பிளவு?



கண்ணாடி-
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸின் தேசிய இணைப்பாளராகவும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினராகவும் இருக்கும் எஸ்.எம். சபீஸ் அதாஉல்லாவினால் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வந்தாரா?

தனது மகனின் மேயர் கனவை கலைக்க முடியாது என்பதனால் முதலாவது வெட்டை வெட்டிய அதாஉல்லா தொடந்தும் தன்னுடைய மகனின் இருப்பை பாதுகாப்பதில் குறியாக இருக்கிறார் என்பதில் உண்மை உண்டா?

ஜனாஸா நல்லடக்க விடயம், பள்ளிவாசல்கள் சம்மேளத்தினால் முன்னெடுக்கப்பட்ட கல்வித்துறை மேம்பாட்டு வேலைத்திட்டங்கள், கிழக்கின் கேடயம் ஊடான சமூக நல செயற்பாடுகள் காரணமாக நாளுக்குநாள் சபீஸின் பெறுமானம் கூடிச்சென்றதால் இப்போது வெளிப்படையாகவே சபிஸை வெட்ட ஆரம்பித்துள்ளாரா?

அக்கரைப்பற்றில் தானும் ஒன்றும் செய்ய மாட்டேன் தன்னுடைய மகனும் செய்ய மாட்டார். செய்பவர்களையும் விடமாட்டோம் எனும் கொள்கை கொண்ட அதாஉல்லா இன்று இடம்பெறவுள்ள உயர்பீட மற்றும் பேராளர் மாநாட்டுக்கு சபீஸை அழைக்காமல் விட்டதன் மர்மம் என்ன?

இதன் உச்சகட்ட விடயம் என்னவென்றால் சபீஸை மட்டுமின்றி அவருக்கு ஆதரவாக இருப்பவர்களையும் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளார்கள் என்று கூறப்படுவது?

கட்சிக்காக தன்னுடைய நிதியை செலவளித்து, தன்னுடைய வாகனங்களை எதிர்க்கட்சிகார்களின் தாக்குதலுக்கு இலக்காக்கி ஒவ்வொரு தேர்தல்களிலும் சபீஸின் பங்களிப்பு அதிகம். இப்படியான சபீசுக்கே வெட்டு என்றால் ஏனையவர்களுக்கு என்ன நடக்கும் ?

மேடைகளில் முழங்கும் தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களான நூருள் ஹுதா, ஷபா மௌலவி, இன்னும் சில கல்விமான்களுக்கும் அழைப்பில்லையாம். காரணம் மகனை தூக்கி பிடிக்கவில்லையாம். மக்களே இது தேசிய காங்கிரஸா? இல்லை...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :