மொன்றியல் கல்வி நிறுவனத்தின் பொறியியலாளர் தொழில் தேர்ச்சி பாடநெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு [05.02.2022]சனிக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இம்தாத் நசீர் தலைமையில் இடம்பெற்றது.
அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப், சட்டமுதுமாணி முன்னாள் கல்முனை மேயர் நிஸாம் கரியப்பர்,இலங்கை சுங்க திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் சட்டமுதுமாணி சம்சுடீன் நியாஸ்,பேராசிரியர் சோ.சந்திரசேகரம்,பேராசிரியர் பர்ஸானா,பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் மாலா பஸ்நாயக்க, மற்றும் நிறுவனத்தின் ஆலோசகர் முர்ஷீட் சின்னலெவ்வை ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர்களினால் பொறியியலாளர் தொழில் பயிற்சி பாட நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டதுடன்.நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளுக்கு MONTREAl INSTITUTE இன் நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் நிகழ்வின் பிரதான உரையை நிகழ்த்தினார்.(ஏ.எஸ்.எம்.ஜாவித்)
0 comments :
Post a Comment