சதுரங்க போட்டியில் நிந்தவூர் அல்- அஸ்ரக் மாணவன் எம்.ஆர் .ஏ.ஹஸன் அல் பன்னா கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்திற்கு வெற்றி பெற்று சாதனை



அஸ்ஹர் இப்றாஹிம்-
உலகத் தமிழர் சதுரங்க பேரவை நடாத்தும் சதுரங்க சுற்றுத்தொடர் யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக் கல்லூரியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இப் போட்டியில் அம்பாறை மாவட்டம் சார்பாக எமது அஷ்ரக்கியன் சதுரங்க கழக மாணவர்களான எம்.ஆர் .ஏ.ஹஸன் அல் பன்னா , ஐ.பிலால் , ஹிமாத் , முஸர்ரப் , யு.ஏ.வை.ஸிம்தி அலி , நஜாத் நப்ரிஸ் , பாஸில் அப்துல்லாஹ் , முனீர் , அக்மல் , அக்மர் பதான் ஆகியோர் பங்கேற்றனர்.
பொறுப்பாசிரியர் ஏ.ஹலீம் அஹமட் , ஏ.எம்.சாகீர் அஹமட் ஆகியோரது கண்காணிப்பின் கீழ் நிந்தவூர் அல் அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவர்கள் சிறப்பான முறையில் வெற்றியீட்டியுள்ளார்கள்.
உலக தமிழர் சதுரங்க பேரவை நடத்திய இப் போட்டியில் அம்பாரை மாவட்டம் சார்பாக பங்குபற்றிய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் மாணவரும் மற்றும் அல் அஸ்றக் தேசிய பாடசாலையின் சதுரங்க கழக மாணவத் தலைவருமான எம்.ஆர் .ஏ.ஹஸன் அல் பன்னா கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தை பெற்று அம்பாரை மாவட்டத்திற்கும் நிந்தவுர் மண்ணிற்கும் , பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
இவர் கல்முனை வலய சமாதான கல்வி அதிகாரி எம்.ஏ.எம்.றஸீன் தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :