கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி எல்லை வீதி (பௌசி மாவத்தை) திருத்த வேலைகள் இழத்தடிப்பு செய்யப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியின் வடிகான் உடைந்த நிலையில் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்ட போது, அதனை பிரதே மக்கள் ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
பாதிப்படைந்து காணப்பட்ட இவ் வீதி ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த வீதியின் திருத்த வேலைகள் இதுவரை முழுமை பெறாமல் இழத்தடிப்பு செய்யப்படுவதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவ் வீதியின் திருத்த வேலைகளை துரிதப்படுத்துமாறு பொதுமக்கள் வேண்டிக் கொள்கின்றனர்.
0 comments :
Post a Comment