வை.எம்.எம்.ஏ.(YMMA )அமைப்பின் அட்டாளைச்சேனை, பாலமுனை, அக்கரைப்பற்று கிளைகளின் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா வெற்றிக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டித் தொடர் அட்டாளைச்சேனை பொதுவிளையாட்டு மைதானத்தில் ஆரம்பமானது
முதல் போட்டியில் அட்டாளைச்சேனை லக்கி அணியும் அக்கரைப்பற்று மயாஸ் அணியும் பங்கு பற்றியது. இதில் லக்கி அணி 4 - 2 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியை தனதாக்கிக் கொண்டது.
லக்கி அணியின் சார்பில் சஞ்ஜீவ் இரண்டு கோல்களையும், டிலுக்ஸன் மற்றும் அணித் தலைவர் நியாஸ் ஆகியோர் ஒரு கோலினையும் அடித்தனர்.
இப்போட்டியில் லக்கி அணியினர் மிகச் சிறப்பாக விளையாடியதுடன் சிறந்த பந்து பரிமாற்றங்களை மேற்கொண்டது இப்போட்டியில் லக்கி அணியினர் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது.
YMMA அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் எம் ஐ .எம்.றியாஸ்,அட்டாளைச்சேனை பிரதேசத்தின் மூத்த உதைபந்தாட்ட வீரர்கள் ஹம்சா சனூஸ், என்.எம்.சகஹுர்தீன் ன், ஆசிரியர் அன்வர் நௌசாட், எஸ்.எம்.ஜெஸில், பிரதேச சபை உத்தியோகத்தர் சியாத்,YMMA அமைப்பின் அட்டாளைச்சேனை கிளை செயலாளர் ஏ.எல்.கியாஸ்டீன், மைதான பொறுப்பாளர் றஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் வீரர்கள் அறிமுகத்திலும் பங்கேற்றனர்.
0 comments :
Post a Comment