கம சமக பிலிசந்தர-2022 வரவு செலவு திட்டத்தினூடாக ஒரு லட்சம் பணிகள் ஆரம்பம் நிகழ்வு.



றாசிக் நபாயிஸ்-
பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி மற்றும் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களின் எண்ணக்கருவில் உருவான கம சமக பிலிசந்தர-2022
(கிராமத்துடனான கலந்துரையாடல்)
வரவு செலவு திட்டத்தின் ஊடான ஒரு லட்சம் பணிகளிகளின் தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு (03) நாடு தழுவிய ரீதியில்
சுப நேரம் காலை 08.52மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் கல்முனை பிரதேச செயலக மட்டத்தில் உள்ள 29 கிராம சேவகர் பிரிவுகளிலும் இவ்வேலைத்திட்டம் பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியின் வழிகாட்டலுக்கு அமைய உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர் ஒருங்கிணைப்பில் கிராம அலுவலர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஏனைய திணைக்கள, அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு இவ் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை முன்னொடுத்தார்கள்.

மருதமுனை ஐந்தாம் பிரிவில் உள்ள ஷம்ஸ் 95 பாலர் பாடசாலை அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை ஷம்ஸ் 95 தலைவர் பி.எம்.அறபாத் தலைமை தாங்கி ஆரம்பித்து வைத்தார்கள்.

இந்நிகழ்வில் பிரதேச அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர் அஹமட் நபாயிஸ், கிராம உத்தியோகத்தர் ஏ.ஆர்.ஸாமிலா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.ஹமீஸ், பாடசாலை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :