ஊடகவியலாளர் றிப்தி அலிக்கு 'போதையற்ற தேசத்திற்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி' விருது



எம். என். எம். அப்ராஸ்-
டகவியலாளர் றிப்தி அலிக்கு ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ விருது அண்மையில் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி ‘போதையற்ற தேசத்துக்கான சுதந்திரப் போராட்ட முன்னோடி’ எனும் விருது, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளது.

புகையிலை, புகைபிடித்தல் மற்றும் மதுசாரம் தொடர்பில் அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையத்தள ஊடகங்கள் ஊடாக, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த உழைத்து வரும் ஊடகவியலாளர்கள், இந்த அதிகார சபையினால் வருடாந்தம் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றார்கள்.

இதற்கமைய 2021ஆம் ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் பத்தரமுல்லையிலுள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்றது.
இதன்போது, விடியல் இணையத்தளத்தின் ஆசிரியர் றிப்தி அலிக்கு தமிழ் மொழிக்கான விருது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவினால் வழங்கப்பட்டது.

புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் தலைவர் கலாநிதி சமாதி ராஜபக்ஷ உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :