வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் க.பொ.த. சாதாரண தர மாணவிகளின் பெற்றோருடனான சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதவுள்ள மாணவிகளின் அடைவு மட்டத்தை அதிகரிக்கும் நோக்கிலே பெற்றோருடன் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.
மாணவிகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய பங்களிப்புகள் தொடர்பாக இந்த சந்திப்பின் போது விளக்கமளிக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.ரீ.எம்.பரீட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், பாடசாலை பிரதி அதிபர் எஸ். பாறூக் கான், ஆசிரியர்களான எம்.எல்.எம்.முஸம்மில், கே.ஆர்.எம்.இர்ஷாத், ஏ.ஆர்.முகைதீன் பாவா ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment