தமன பொலிஸ் பிரிவில் கார் ஒன்றுடன் லாரி மோதி கோரவிபத்து !! மூவர் உயிரிழப்பு - மேலும் சிலர் காயம் update




ஐ.எல்.எம் நாஸிம் ,நூருல் ஹூதா உமர்-
காரில் சம்மாந்துறை மற்றும் கல்முனைக்குடி பிரதேசத்தை சேர்ந்த 8 பேர் வெள்ளிக்கிழமை கொழும்பைநோக்கி பயணத்தை மேற்கொண்டு சம்பவதினமான நேற்று ( ஞாயற்றுக்கிழமை) ஊர் நோக்கிதிரும்பிக்கொண்டிருந்த வேலையில் சுமார் மாலை 6.00 மணியளவில் அம்பாறை-தமன பிரதேசத்தில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
சம்மாந்துறை மலையடிகிராமம் 1 கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் ஓரே குடும்பத்தை சேர்ந்த கொழும்புதனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இப்றாலெப்பை முகம்மது ஜெசீல் (வயது-45),சம்மாந்துறைநெய்னாகாடு அல் அக்சா வித்தியாலய ஆசிரியர் சுலைமாலெப்பை பிரோஸா (வயது 42),4வயதுடையபிள்ளை என மூவர் மரணித்துள்ளதாக அறிய முடிகிறது.அதே குடும்பத்தை சேர்ந்த இருவரும்கல்முனைக்குடியை சேரந்த மூவரும் மொத்தமாக ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவருவதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறித்த இச் சம்பத்தில்சம்மாந்துறை கல்முனை பிரதேச மக்கள் மத்தியில் துக்க நிலை உருவாகியுள்ளதை காணமுடிகிறது.

சுகிர்தகுமார் -

அம்பாறை தமன பொலிஸ் பிரிவில் கார் ஒன்றுடன் லாரி மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச் சம்பவம் நேற்று 2022.01.16 மாலை அம்பாரை கொழும்பு வீதியில் தமன பிரதேசத்தில் எக்கல்ஓயா 40ம் கட்டையில் இடம் பெற்றுள்ளது
கனரக வாகனம் -ஆளடியான் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் சிலர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்த ஒன்றரை மாத ஆண் குழந்தை மற்றும் அவருடைய தந்தை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :