கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள வர்த்தகரும் சமூக சேவையாளருமான எம்.ஜ.எம்.றஜப்தீன் இன்று திங்கட்கிழமை (27) தனது சத்தியப்பிரமாண பத்திரத்தை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் கையளித்து, உறுப்பினர் பதவியை பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாநகர முதல்வர் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர்களான ஹென்றி மகேந்திரன், ரி.ராஜரட்ணம், சபைச் செயலாளர் ஏ.எம்.ஆரிப், மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.ஜீ.எம்.நதீர், அக்கட்சியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் எம்.ஐ.எம்.மஸீன் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை மாநகர சபையின் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் உறுப்பினராக பதவி வகித்து வந்த சட்டத்தரணி என்.ஏ.எம்.அஸாம் இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மருதமுனையை சேர்ந்த எம்.ஐ.எம்.றஜப்தீன் அக்கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்முனை மாநகர சபைக்கான தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு கிடைக்கப் பெற்ற ஒரேயொரு ஆசனத்த்திற்கு கட்சியின் மீளழைத்தல் கொள்கைக்கமைவாக சுழற்சி முறையில் நான்காவது பதவியாண்டுக்கான உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் கல்முனை பிராந்திய அமைப்பாளர் ஏ.ஜீ.எம்.நதீர் மௌலவி ஏ.ஜீ.எம்.நதீர் மற்றும் வர்த்தகர் தாஜுதீன் முபாரிஸ் ஆகியோர் முறையே முதலாவது, இரண்டாவது பதவியாண்டுகளுக்கு உறுப்பினர்களாக கடமையாற்றி, இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment