கிழக்கு மாகாணத்தில் ஆயுள்வேதத்துறையை தனியார்துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நேற்று (04) இடம்பெற்றது.
திருகோணமலை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் ஆளுநரின் இணைப்புச் செயலாளர் பி.வி.எச்.சிந்தக்க விஜயவரத்தன, ஆளுநர் செலயக செயலாளர் எல்.பி.மதநாயக்கா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர், தேசிய ஆயுள்வேத நிறைவேற்று தவிசாளர் தெங்கமுவ நாலக தேரர், கிழக்கு மாகாண ஆயுள்வேத அபிவிருத்திக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பல திட்டங்களைப் பற்றிய பல விடயங்களை கிழக்கு மாகாண ஆணையாளர் வைத்திய கலாநதி (திருமதி) இ.ஸ்ரீதரினால் ஆளுநரின் கவனத்திற்கு இதன்போது கொண்டுவந்தார்.
ஆயுள்வேதத்துறையை அபிவிருத்தி செய்ய தனியார்துறையின் பங்களிப்புக்கள் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றது. அதனால் அவர்களின் பங்களிப்புக்கள் எமக்குத் தேவையாகவும் இருக்கின்றது. எனவே, ஆயுள்வேதத்துறையை தனியார்துறையுடன் இணைந்து அவிருத்தி செய்தல் மற்றும் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் ஆயுள்வேத அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய பல தீர்மானங்களும் இன்றைய கலந்துரையாடலின்போது கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பதினால் எடுக்கப்பட்டது.
இதன்போது, கிழக்கு மாகாண ஆயுள்வேத அபிவிருத்திக்குழு உறுப்பினர்களின் பல கருத்துக்களும் முன்வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment