வாசிப்பை மேம்படுத்தும் 'சுட்டிஸ் உலகம்' நூல் இலவசமாக வழங்கிவைப்பு!



வி.ரி.சகாதேவராஜா-
மிழா ஊடக வலையமைப்பு மற்றும் வித்யாசாகர் கலை மன்றம் ஆகியன இணைந்து வாசிப்பை மேம்படுத்தும் 'சுட்டிஸ் உலகம்' எனும் நூலை இலவசமாக வழங்கிவைத்தன.

இந்தியாவின் பன்முக ஆளுமை இசையமைப்பாளர் வித்யாசாகரின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழா ஊடக வலையமைப்பு மற்றும் வித்யாசாகர் கலை மன்றம் ஆகியன இணைந்து நாவிதன்வெளி கோட்டப் பாடசாலைகளில் தரம் 3 இல் கல்வி கற்கும் 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான வாசிப்பை மேம்படுத்தும் 'சுட்டிஸ் உலகம்' எனும் நூல் இலவசமாக கணேஷா வித்தியலயத்தில் வழங்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் எஸ் எம் ஜெலீஸ், மற்றும் அதன் ஆலோசகர் சந்தக்கவி எம் ஐ அச்சி முகம்மது ,நாவிதன்வெளி கோட்டக்கல்வி அலுவலக இணைப்பாளர் சி.பிரகதீஸ்வரன் , குறித்த பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :