வஃபா பாறுக்கின் பார்வையில் ஞானசார தேரரின் கல்முனை விஜயம்! (முழுமையான படங்கள்)



ரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கிழக்குமாகாணத்துக்கான விஜயத்தின் ஓரங்கமான விரிவுரையாளர்

முபிஸால் அபூபக்கரின் வழிகாட்டலில் தாருஸ்ஸபா குழுமத்தின் ஏற்பாட்டில் நேற்று கல்முனை தாருஸ்ஸபா வரவேற்பு அரங்கில் உரையாடலொன்று நிகழ்ந்தது.
செயலணியின் தவிசாளர் ஞானசார தேரரை நேரடியாக கண்டு கணிக்கவும், கதைக்கவும் ஒரு வாய்ப்பை இந்த நிகழ்வு வழங்கியது.
நிகழ்வில் உரயாற்றிய கல்முனை நஸீர் ஹாஜி சில ஆவணங்களை ஞானசார தேரரின் பார்வைக்கு மேசையில் வைத்தார்.
பொதுவாக எல்லோரும் செய்வது போல் ஆறுதலாய் வாசிப்போம் என்று சுறுட்டி வைக்காமல் விடையம் தொடரபாக 'எக்சத்' எனும் சிங்கள பத்திரிகையில் வெளியாகியிருந்த கட்டுரையை களைப்புற்றிருந்த நிலையிலும் முழுமையாக வாசித்து அவற்றில் சில பந்திகளை பேனையால் கோடிட்டு வைத்து பின்னரான தனது உரையின் போது மேற்கோள் காட்டிப்பேசியது; ஞானசார தேரருக்கு சண்டித்தனம் தாண்டிய இன்னொரு அறிவியல் குணாம்சம் இருப்பதை அறியத்தந்தது.
'தீண்டத்தகாத ஊரென இதுவரை நாம் கருதிய காத்தான்குடிக்கு சென்றபோதுதான் அங்குள்ள மக்களின் அன்பையும் ஆதரிப்பையும் அறிந்துகொண்டோம்' என்று ஞானசார தேரர் தனது பக்குவான பதிலுரையில் குறிப்பிட்டது மேலும் முக்கியமானது.
சர்ச்சைக்குரிய ஒருவராக மட்டுமே இயங்கிய ஞானசார தேரரின் பக்குவமான இயங்கியலையும் கண்டுகொள்ளும் வாய்ப்பை கல்முனை நிகழ்ச்சி எமக்கு வழங்கியது
எழுதப்படாத ஒரு உடன்படிக்கையாகவே ஒட்டுமொத்த நிகழ்வையும் கருதுகின்றேன்.
நிகழவில் கலந்துகொள்ள வாய்ப்பளித்த விரிவுரையாளர் முபிஸால் அவர்களுக்கும் தாருஸ்ஸபாவுக்கும் எனது நன்றிகள்






















































(படங்கள் தாருஸ்ஸபா)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :