பறிபோகிறது பதவிகள்!!!



கட்சிக்கு துரோகமிழைத்ததனால் ரெபுபாசத்தின் பிரதித் தவிசாளர் பதவி பறிபோனது

ஆதம்-
றாவூர் நகர சபையின் பிரதித் தவிசாளர் ரெபுபாசத்தினை கட்சியிலிருந்தும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நீக்கியுள்ளது.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு தோல்வியடைந்த எம்.எல்.ரெபுபாசம், பட்டியல் ஆசனத்தினூடாக ஏறாவூர் நகர சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

ஏறாவூர் நகர சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட அவர், நகர சபை தவிசாளர் தெரிவின் போது கட்சியினுடைய தீர்மானத்தினை புறக்கனித்தும், கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் செயற்பட்டதனால், சுதந்திரக்கட்சி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டது.

மேற்படி ஒழுக்காற்று விசாரணைகளின் தீர்ப்பினையடுத்து, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு, அவரது கட்சி உறுப்புரிமையை இரத்துச்செய்து கட்சியில் இருந்தும் வெளியேற்றியுள்ளது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மற்றுமொரு உறுப்பினரான எம்.எஸ்.எம்.ஜஃபர் என்பவரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கை மற்றும் நடவடிக்கைகளுக்கு எதிராக செயற்பட்டதனால், அக்கட்சி அவருக்கெதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொண்டு, அவரது உறுப்புரிமையையும் இரத்துச்செய்து கட்சியில் இருந்து வெளியேற்றியுள்ளது.

இதற்கினங்க, ஏறாவூர் நகர சபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபை ஆகியவற்றில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்குறித்த உறுப்பினர்களின் பதவிகள் நீக்கப்பட்டமை குறித்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :