அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றை சேர்ந்த தணிகாசலம் தர்ஷிகா என்ற மருத்துவபீட கொழும்பு பல்கலைக்கழக மாணவி தனது MBBS இறுதி பரீட்சையில் முதல் தரத்தில் தேர்ச்சி பெற்று 13 தங்கப்பதக்கங்களை பெற்று சாதனை படைத்தார்.
கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பட்டமளிப்பு விழாவின்போது வழங்கப்படும் 37 தங்கப்பதக்கங்களில் சிறந்த மருத்துவ பீட மாணவ விருது உள்ளடங்களாக 13 தங்கப்பதக்கங்களை கைப்பற்றிய இம்மாணவியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் கெளரவ இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை நேரடியாக அவரது இல்லத்திற்கு வருகை தந்து வாழ்த்தி பொன்னாடை போர்த்தி பாராட்டி கௌரவப்படுத்தினார்.
0 comments :
Post a Comment