மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளாத அரசாங்கம், இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக,அமைச்சரவைக்குக் கூட தெரிவிக்காமல், நாட்டின் அனைத்து வளங்களையும் இரகசியமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வருவதாகத் தெரிவித்தார்.
நாடு தற்போது மிக முக்கியமான எரிசக்தி பாதுகாப்பின்மையை எதிர்நோக்கி வருவதாக கூறிய எதிர்க் கட்சித் தலைவர் அதன் விளைவுகள் மிகவும் துரதிஷ்டவசமாக இருக்கும் என்றும் கூறினார்.
வெளிப்படையாகவே யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அப்பட்டமாக களவுத்தனமாக விற்று நாட்டிற்கு பெரிய அழிவை ஏற்படுத்திய அரசாங்கம், நாட்டின் பாதுகாப்போடும் விளையாடிக் கொண்டிருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
முழு நாட்டையும் தவறாக வழிநடத்திய வன்னம் அரசாங்கம் மேற்கொண்டு வரும் இந்த பாரிய விற்பனைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என கூறிய எதிர்க் கட்சித் தலைவர், அரசாங்கத்தால் விற்கப்படும் இந்த தேசிய வளங்களை வாங்க வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவில் நடைமுறைப்படுத்தப்பட்டு முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் பிரச்சிணைகளை கேட்டறியும் 'நகரத்திற்கு நகரம் கிராமத்திற்கு கிராமம் வீட்டிற்கு வீடு' நிகழ்ச்சியின் மற்றுமொரு கட்டம்
நேற்று (11) அவிசாவளையில் நடைபெற்றது.இந் நிகழ்வில் பங்கேற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை அமைப்பாளர் தனுஷ்க கொடித்துவக்கு ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் முன்னாள் அவிசாவளை அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான லியோனார்ட் கருணாரத்ன,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர்.பீரிஸ்,அவிசாவளை உதவி அமைப்பாளர் கயான் துமிந்த உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாட்டில் தற்போது ஏல அரசாங்கமே காணப்படுவதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,நாட்டு மக்கள் சாப்பிட முடியாமல் பெருமூச்சு விடும் போது கூட இந்நிலை குறித்து அரசாங்கம் கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். விவசாய சமூகத்தை அடுப்பிலிருந்து சட்டிக்குள் தள்ளிவிட்டுள்ள அரசாங்கம், நாட்டின் அனைத்துத் துறைகளையும் பேரழிவில் ஆழ்த்தியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment