கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகம் நடாத்தும் பிரதேச கலாசார விழா செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் அஷ் ஷெய்க் ஏ.எல்.பீர்முஹம்மது தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளரும் சிரேஷ்ட இலக்கிய முன்னோடியுமான ஏ.எம்.ஏ.காதர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக கிழக்குப் பல்கலைக் கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.ரிஸ்வி (மஜீதி), பிரதேச செயலக கணக்காளர் ஏ.மோகனகுமார், நிருவாக உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் ஹமீத், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.பீ.எம்.ருமைஸ், செயலக உத்தியோகத்தர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கலாசார விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் பிரதேச கலைஞர்களினதும் மாணவர்களினதும் கலை நிகழ்ச்சிகளும்இடம்பெற்றது.
0 comments :
Post a Comment