வட மாகாணத்திலிருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு முப்பத்தொரு ஆண்டுகள் நிறைவடைவதையிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், தமிழ் மொழி மூலம் கட்டுரைப் போட்டி ஒன்றை நடாத்துகிறது. இக்கட்டுரைப் போட்டியில் வயதுக் கட்டுப்பாடின்றி, ஆண், பெண் இருபாலரும் பங்குபற்றலாம். கட்டுரையின் தலைப்பு " பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் அவல நிலையும் எதிர்காலமும்"
வெற்றி பெறும் ஆக்கங்களுக்கு பணப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.
1ம் இடம் 15 000/- ரூபா.
2ம் இடம் 10 000/- ரூபா.
3ம் இடம் 5 000/- ரூபா.
போட்டியில் பங்குபற்றும் ஏனையோருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
கட்டுரைகள் 1500 சொற்களுக்கு மேற்படாமல், பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் கடந்த கால கஸ்டங்கள், நிகழ் கால பிரச்சனைகள், எதிர் கால தீர்வுகள் பற்றியதாக எழுதப்பட்டு,'டைப் செட்டிங்' செய்யப்பட்டு
2021 நவம்பர் 15ம் திகதிக்கு முன் கிடைக்கக் கூடியதாக, அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: acumlyfadmn@gmail.com
தபால் முகவரி: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம், இல: KG 7, எல்விடிகல மாடி வீட்டுத் தொகுதி,கொழும்பு 8.
(All Ceylon Union of Muslim League Youth Fronts, No: KG 7 , Elvitigala Flats, Colombo 8).
மேலதிக விபரங்களுக்கு 011267 4006, 077 227 5163 எனும் இலக்கங்களோடு தொடர்பு கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment