மின்வெட்டு தொடர்பில் கல்முனை பிராந்திய மின் பொறியலாளரின் அறிவித்தல்



பாறுக் ஷிஹான்-
வசரத் திருத்த வேலை காரணமாக கல்முனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

இதன்படி, நாளை 07ஆம் திகதி பாண்டிருப்பு, அக்பர் கிராமம் ஆகிய பகுதிகளிலும் சனிக்கிழமை (11), நீதிமன்ற வீதி, ரெஸ்ட் ஹவுஸ் வீதி, வீட்டுத்திட்டம் குறுந்தயடி, பாலமுனை , அட்டாளைச்சேனை, ஒலுவில் வீட்டுத்திட்டம், ஹிச்ரா பிரதான வீதி அம்பாறை வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

திங்கட்கிழமை (13), சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை ஆகிய பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (14), அம்பாறை வீதி, வங்கலாவாடி, சென்னல்கிராமம் ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

18ஆம் திகதி, வைத்தியசாலை வீதி இருந்து தாளவெட்டுவான் ப்ரதர் ஹவுஸ் வீதி, மணல்சேனை, மருதமுனை, துரவந்தியமேடு, பெரியநீலாவனை, பாண்டிருப்பு, சென்னல்கிராமம் மலையடிகிராமம் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

21ஆம் திகதி, மைகாட்டி இருந்து நைனாகாடு ஆகிய பகுதிகளிலும் 29ஆம் திகதி, சின்னாபாலமுனை மற்றும் கோணவத்தை ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :