வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் இரு மாணவர்கள் சர்வதேச கராத்தே போட்டியில் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தெரிவித்தார்.
உலக கராத்தே சம்மேளனம் நடாத்திய ஈ காட்டா சாம்பியன்ஷிப் சுற்றில் குறித்த இரண்டு மாணவர்களும் சர்வதேச ரீதியாக இரண்டாம் இடங்களைப் பெற்று நாட்டுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ளனர்.
இவ்வாறு சாதனைகளைப் நிலைநாட்டியுள்ள எம்.பி.அல்தாப் பஸீர் மற்றும் எம்.ஐ.எம்.இம்றியாஸ் ஆகிய இரு மாணவர்களுக்கும் மாணவர்களை தயார்படுத்திய உடற்கல்வி ஆசிரியர் ஆர்.அலோஜிதன் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்கிய பெற்றோர்கள், கராத்தே பயிற்றுவிப்பாளர்கள் அனைவருக்கும் பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment