கலாபூஷணம் நுாருல் அயின் நஜ்முல் ஹூசைன் எழுதிய ”திதுலன தாரக்கா” (மின்னும் தாரகை ) இலங்கை முஸ்லிம் பெண் எழுத்தாளா்கள் பற்றிய ஆய்வு சிங்கள நுாலின் வெளியிட்டு விழா சனிக்கிழமை (4) கொழும்பு அல்ஹிதாயா தேசிய கல்லுாாியின் பஹாா்தீன் கேட்போா் கூடத்தில், தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியா் தே. செந்தில் வேலவா் தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம், (பா.உ) அவா்களினால் நுாலின் முதற் பிரதியை கவிதாயினி எம்.எம். மதீனா உம்மா பெற்றுக் கொண்டாா்.
இந் நிகழ்வில் கௌரவ அதிதியாக இம்தியாஸ் பாக்கீா் மாக்கார்,அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் முஸ்லிம் மிடியா போரத்தின் தலைவா் , என்.எம். அமீன் சட்டத்தரணி ரசீத் எம். இம்தியாஸ், முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களத்தின் பணிப்பாளா் எம். அன்சாா் உட்பட இலக்கியவாதிகள், முஸ்லிம் பெண் எழுத்தாளா்கள், ஊடகவியலாளா்கள் பலா் கலந்து சிறப்பித்தனா்
0 comments :
Post a Comment