ஏறாவூர் மீராகேணி பிரதேசத்தில் சமூக முன்னோடிகள் பத்துப்பேருக்கு கௌரவம்



ஏறாவூர் நிருபர்-நாஸர்-
மீராகேணி ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரின் ஏற்பாட்டில் அப்பள்ளிவாயல் மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
பள்ளிவாயல் நிருவாக சபைத்தலைவர் எம்.பி. ஜெயினுலாப்தீன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது கல்வி , நிருவாகம், வைத்தியம், மார்க்கம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கடந்தகாலங்களில் பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பான பணியாற்றிமைக்காக இந்த கௌரவிப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக செயலாளர் எம்எச். அஸ்மிர் தெரிவித்தார்.

சமூக முன்னோடிகள் இதன்போது பொன்னாடை போர்த்தி நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இளந்தலைமுறையினரை சமூகப்பணிகளில் ஊக்கப்படுத்தம் நோக்கதத்துடன் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சமூக முன்னோடிகளுக்கான பாராட்டு நிகழ்வு இப்பிரதேசத்தில் வரலாற்றில் முதல் தடவையாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :