கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இன்று (07) தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு எச்.ஐ.வி/எயிட்ஸ் தொடர்பான வலுவூட்டல் நிகழ்ச்சி மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடாத்தப்பட்டது.
கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்தியர் ஏ.எல்.எப். ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பிராந்திய பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் நோய்கள் பிரிவின் பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் கே.ஏ.சி.ஆர். விஜேசேகர பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.
இதன் போது வைத்திய நிபுணர்கள்,மருத்துவ அதிகாரிகள், தாதி உத்தியோகத்தர்கள், ஆய்வுகூட பரிசோதனையாளர்கள், மருத்துவ மாதுக்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மருத்துவ அதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment