தென்கிழக்குப் பல்கலைக்கழக உத்தியோகத்தர்களுக்கான மூன்றாவது கட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு.(படங்கள்)




சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-
லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் அவர்களின் பிரதான  பங்குபற்றலுடன் இப்பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 30 வயதுக்கு மேற்பட்ட உத்தியோத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கான கொரோனா கோவிட் -19 மூன்றாவது கட்ட பூஸ்டர் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு 22 ஆம் திகதி (புதன்கிழமை) பல்கலைக்கழக பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சுகாதார திணைக்களத்தின்; வேண்டுகோளுக்கிணங்க பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுத் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைவாக பல்கலைக்கழக நிருவாகத்தின் ஏற்பாட்டில் அட்டாளைச்சேனை பிரதேச வைத்திய அதிகாரி காரியாலயத்தின் ஊடாக இத்தடுப்பூசி வழங்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ்,விரிவுரையாளர்கள, நலன்புரிப் பிரிவின் பிரதிப் பதிவாளர் பி.எம்.முபீன், கலை, கலாசார பீடத்தின் அரசியல் துறைத்தலைவர் பேராசிரியர் எம்.ஏ.எம். பௌஸர் உட்பட நிருவாக உத்தியோகத்தர்கள், ஊழியர்களும்; கலந்து கொண்டனர்.




























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :