வீதிகளில் தனியார் மற்றும் அரச பேரூந்துகளின் தற்காலிக தரிப்பிடமாக மாறுவதனால் போக்குவரத்து சீர்கேடு ஏற்பட்டு வருகின்றது.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்ற அரச பேரூந்து தரப்பிடத்திற்கு முன்னால் தினந்தோறும் இச்சம்பவம் பதிவாகி வருகின்றது.
அம்பாறை மட்டக்களப்பு கொழும்பு யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இவ்வீதி வழியாக பயணம் செய்கின்ற தனியார் அரச பேரூந்துகள் வீதி போக்குவரத்தினை சீர்குலைக்கின்ற வகையில் இயங்குவதை அவதானிக்க முடிகின்றது.
இதனால் பொது போக்குவரத்து மேற்கொள்கின்ற ஏனைய வாகன சாரதிகள் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இடையிடையே கல்முனை போக்குவரத்து பொலிஸாரும் இப்பிரச்சினைகளில் தலையிட்டு நிலைமையை சீர் செய்து வருகின்றனர்.
எனினும் இச்செயற்பாடு தொடர்வதனால் விபத்துச்சம்பவங்களும் வீண் மோதல் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
இது தவிர சில பேரூந்துகளில் கொரோனா சுகாதார நடைமுறைகள் எதுவுமின்றி போக்குவரத்துக்கள் இடம்பெறுகின்றன.
தற்போது ஒமைக்ரோன் கொரோனா பிறழ்வு உலகம் பூராகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
0 comments :
Post a Comment