சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றுக் கொண்டார்.
கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அரச தொலைக்காட்சி ஆலோசனைக்குழுவின் ஏற்பாட்டில் 15ஆவது வருடமாக இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுக்கான தொலைக்காட்சி கலை விருது வழங்கும் விழா கடந்த 29ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் தொலைக்காட்சியில் சிறந்த தமிழ் செய்தி வாசிப்பாளருக்கான விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டு, சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான அரச தேசிய விருதினை நேத்ரா தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் பெற்றார்.
2019 ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மதிப்பீடு செய்யப்பட்ட வேளை, தொலைக்காட்சியில் சிறப்பாக செய்திகளை முன்வைத்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment