கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தினால் மருத்துவ உதவி கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ் ஏற்பாட்டில் டைபெற்ற நிகழ்வில்
பிரதேச செயலாளர் ஏந்திரி க.அருணன் கலந்து கொண்டு காசோலையினை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆறுமுகம் சுதாகரன், கணக்காளர் ஜெ .ஜோர்ஜ் ஆனந்தராஜ் , நிருவாக உத்தியோகத்தர் ஏ.எஸ்.ஏ.ஜெமில் , சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் , சமூர்த்தி முகாமையாளர் திருமதி.கலைவாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது 5500 ரூபாய் வீதம் 10 பேருக்கு மற்றும் இரட்டை பிள்ளைகளுக்கான கொடுப்பனவு 7500 ரூபாய் வீதம் 04 பேருக்கும் , கல்வி கொடுப்பனவாக 4200 ரூபாய் வீதம் 03 பிள்ளைகளுக்கும் வழங்கி வைக்கப்பட்டதாக செயலக சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் அ.அழகுராஜ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment