கடல்கொந்தளிப்பினால் மீண்டும் பிரச்சினையை சந்திக்க தயாராகி வருகின்றது மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி. கடந்த வருடம் ஏற்பட்ட கடல்கொந்தளிப்பினால் சுற்றுமதில் முழுமையாக இடிந்து விழந்து ஜனாஸாக்கள் வெளிவந்துகொண்டிருந்த நிலையில் பிரதேச அரசியல்வாதிகளின் முயற்சியின் பயனாக பிரதமரின் தலையீட்டினால் ஒரு கோடி நாற்பது லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தடுப்புசுவரும் இந்த வருட கடல் கொந்தளிப்பினால் பயனற்று போகும் நிலை உருவாகியுள்ளது.
கடல்கொந்தளிப்பிலிருந்து மாளிகைக்காடு ஜனாஸா மையவாடியை பாதுகாக்க நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டுக்கு பக்கத்தில் 10- 12 அடி ஆழமான பாரிய குழிகள் விழுந்துள்ளதுடன் கடலரிப்பினால் கடலை நோக்கி மண்ணிழுபட்டு சென்றுள்ளதனால் அணைக்கட்டும் பலமிழந்து மாளிகைக்காடு ஜனாஸா மையவாடி ஆபத்தை சந்திக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை மீண்டும் எழுந்துள்ளது. இது விடயம் தொடர்பில் அரச அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுத்தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment