பிரதமரின் 76வது பிறந்த தினத்தையொட்டி தெஹிவளை ஜூம்ஆ பள்ளிவாசலில் பிரதமருக்கு ஆசி வேண்டி விசேட துஆப்பிராத்தனை ஒன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் இப்ராஹிம் அன்ஸார் தலைமையில் இடம்பெற்றது.
புத்தசாசன அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.
பிரதமரின் முஸ்லிம் சமய விவகார இணைப்பாளர் கலாநிதி ஹசன் மௌலானா சிங்கள மொழியிலும்இ அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபையின் கொழும்பு தெற்கு கிளையின் தலைவர் அஷ்ஸெய்க் அப்துல் அஸீஸ் தமிழிலும் விசேட துஆப்பிரார்த்தனைகளை நடத்தினார்கள்
இதில் நீதி அமைச்சர் அலி சப்ரி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான். மர்ஜான் பளீல். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலா அகமட் பிரதமரின் முஸ்லிம் சமய விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் பர்சான் மன்சூர். திணைக்களத்தின் அதிகாரிகள் இ தெஹிவலை பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிருவாக சபை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் பள்ளிவாசல்களில் நீண்டகாலம் கடமையாற்றியவர்களுக்கு கொழும்பு மாவட்ட முஅஸ்சின் மற்றும் கதீப்மார் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் சான்றிதழ்களும் அமானா காப்புறுதி நன்கொடைகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
0 comments :
Post a Comment