"பிரஜா ஹரித அபிமானி" திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு !



நூருல் ஹுதா உமர்-
னாதிபதியின் எண்ணக்கருவில் உருவான பசுமையான தேசத்தினை உருவாக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் பிரஜா ஹரித அபிமானி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மரநடுகை திட்டம் இன்று (21) இறக்காமம் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நீர்மூலங்களை பாதுகாத்தல் மற்றும் கிராமங்களை அழுகுபடுத்தி பசுமையான இலங்கையை கட்டியெழுப்பும் வகையில் ஜனாதிபதியினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசிய சமூக நீர்வழங்கல் திணைக்களம் ஊடாக இந்த திட்டம் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இதன் அம்பாரை மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு மாவட்ட தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களப் பொறுப்பதிகாரி எம்.எல். முஸப்பிர் இன் ஏற்பாட்டில் குடுவில் அல்-ஹிறா வித்தியாத்தில் கல்லூரி அதிபர் எம்.ஏ.பஜீர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாவட்ட பதில் அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீஸன் கலந்து கொண்டார்.

விஷேட அதிதிகளாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான், பிரதேச சபை தவிசாளர் எம்.எஸ். ஜெமீல் காரியப்பர், சிறப்பு அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல், வனவிலங்கு பாதுகாப்பு, வனவளஜீவன அபிவிருத்தி மற்றும் யானை வேலிகள் அமைத்தல் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்கவின் இணைப்பாளர் ராஜபக்க்ஷ, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்சார், நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம்.ஜெமீல், சிரேஷ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் யூ.எல். ஆஹிர், பிரிவுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் எம்.ஜே.எம் அத்தீக் உட்பட சமூக மட்டக் குழுக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பிரதேச மட்ட அமைப்புகளுக்கும் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :